

திருச்சி, மார்ச்.29-
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் திருச்சி மன்னார்புரம் கிழக்கு இயக்கலும் காத்தலும் செயற்பொறியாளர் கா.முத்துராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
துவாக்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (புதன்கிழமை) நடைபெற உள்ளது. இதையொட்டி நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நேருநகர், அண்ணாவளைவு, ஏ.ஓ.எல்., அக்பர்சாலை, அசூர், அரசு பாலிடெக்னிக், எம்.டி.சாலை, ராவுத்தன்மேடு, பெல்நகர், இந்திராநகர், பெல் டவுன்ஷிப்பில் சி-செக்டார் மற்றும் ஏ.இ.ஆர். பிஎச் செக்டார், தேசிய தொழில்நுட்பக்கழகம் (என்.ஐ.டி.), துவாக்குடி மற்றும் துவாக்குடி தொழிற்பேட்டை, தேனேரிப்பட்டி, பர்மாநகர், தேவராயநேரி, பொய்கைக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.