புதுக்கோட்டை, காரையூர் பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம்

புதுக்கோட்டை, காரையூர் பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம்
புதுக்கோட்டை, காரையூர் பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம்
Published on

புதுக்கோட்டை, ஆக.5-
புதுக்கோட்டை சிப்காட் துணை மின் நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி இங்கிருந்து மின் வினியோகம் செய்யப்படும் சிப்காட் நகர், சிப்காட் தொழிற்பேட்டை, தாவூது மில், சிட்கோ தொழிற்பேட்டை, (ரங்கம்மாள் சத்திரம்) கே.கே.நகர், மாணிக்கம்பட்டி, வாகைபட்டி, முத்துடையான்பட்டி, கிளியூர், மேலூர், அம்மன்பேட்டை, உடை ஆண்டிப்பட்டி, இரும்பாலி, சித்தன்னவாசல், வடசேரி பட்டி, வாகவாசல், முள்ளூர், இச்செடி, வடவாளம், புத்தாம்பூர், செம்பாட்டூர், கேடையப்பட்டி, செட்டியபட்டி, ராயப்பட்டி, காயாம்பட்டி, மேல காயாம்பட்டி, வேப்பங்குடி, பள்ளத்திவயல், பாலன் நகர், பழனியப்பா நகர், அபிராமி நகர், கவிதா நகர், வசந்தபுரி நகர், பெரியார் நகர், தைலா நகர், ராம் நகர், மச்சுவாடி ஜீவா நகர், மற்றும் சிட்கோ தொழிற்பேட்டை ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவல் தமிழ்நாடு மின் வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் மேலத்தானியம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. இதையொட்டி காரையூர், ஒலியமங்கலம், நல்லூர், அரசமலை, இடையாத்தூர், எம்.உசிலம்பட்டி, சித்தூர், கீழத்தாணியம், மேலத்தானியம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவல் பொன்னமராவதி மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com