சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
Published on

எஸ்.புதூர்,

எஸ்.புதூர் அருகே கரிசல்பட்டியில் உள்ள பழமைவாய்ந்த கைலாசநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் நந்தீஸ்வரர் மற்றும் கைலாசநாதருக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து நந்தீஸ்வரர் மற்றும் கைலாசநாதர் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தனர். இதேபோல் உலகம்பட்டி உலகநாயகி சமேத உலகநாத சாமி கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. அதனை தொடர்ந்து உலகநாயகி சமேத உலகநாத சாமி ரிஷப வாகனத்தில் உள் மண்டபத்தில் எழுந்தருளினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
காளையார்கோவிலில் சொர்ணகாளீஸ்வரர் கோவில் பிரதோஷ வழிபாடு நடந்தது. பக்தர்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி சாமி தரிசனம் செய்தனர்.
இதே போல் பாகனேரி சிவன் கோவில், சாக்கநாதபுரம் சிவன் கோவில், மதகுபட்டி சிவன் கோவில்களில் பிரதோஷ விழா நடந்தது. இதையொட்டி நந்திபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com