சங்கராபுரம் பகுதியில் பிரதோஷ வழிபாடு

சங்கராபுரம் பகுதியில் பிரதோஷ வழிபாடு
சங்கராபுரம் பகுதியில் பிரதோஷ வழிபாடு
Published on

சங்கராபுரம்

சங்கராபுரம் முதல் பாலமேடு காமாட்சி அம்பாள் சமேத ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. முன்னதாக கோவில் நந்திக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டு அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

இதேபோல் அ.பாண்டலம் ஆதிபுரீஸ்வரர், மூக்கனூர் தாண்டுவனேஸ்வரர், மஞ்சபுத்தூர் கைலாசநாதர், ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com