சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

பெரியகுளம் பகுதியில் பிரதோஷத்தையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது
சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
Published on

பெரியகுளம் அருகே ஈச்சமலை பகுதியில் உள்ள மகாலட்சுமி கோவிலில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி 108 தேங்காய் உடைத்து சிவன், நந்தீஸ்வரர், மகாலட்சுமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் தேனி மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் பெரியகுளம் பாலசுப்ரமணிய சுவாமி கோவில், காளஹஸ்தீஸ்வரர் கோவில், தென்கரை காளியம்மன் கோவில் உள்பட சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com