குண்டர் தடுப்பு சட்டத்தில் வாலிபர் சிறையில் அடைப்பு

கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் தலைமையில் கவரைப்பேட்டை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
குண்டர் தடுப்பு சட்டத்தில் வாலிபர் சிறையில் அடைப்பு
Published on

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளுர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் நவீன ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி உள்ளது. இங்கு கடந்த மாதம் 22-ந்தேதி கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் தலைமையில் கவரைப்பேட்டை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த ஆந்திர மாநில அரசு பஸ்சில் 18 கிலோ கஞ்சா கடத்தி வந்ததாக சென்னை ஆவடியை சேர்ந்த விக்ரம் (வயது 24) என்பவரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் பரிந்துரையின் பேரில் மாவட்ட கலெக்டர் பொன்னையா அந்த வாலிபரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு நகல் சிறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com