திருச்செந்தூர் அருகே பாதிரியார் தற்கொலை

திருச்செந்தூர் அருகே பாதிரியார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருச்செந்தூர் அருகே பாதிரியார் தற்கொலை
Published on

திருச்செந்தூர்:

தூத்துக்குடி இனிகோ நகரை சேர்ந்த ஆஸ்வால்ட் மகன் மரிய அஜித் (வயது 24). இவர் திருச்சியில் உள்ள ஒரு இறையியல் கல்லூரியில் படித்துள்ளார். தற்போது திருச்செந்தூர் அருகே உள்ள அடைக்கலாபுரம் புனித சூசை அறநிலையத்தில் கடந்த 8 மாதமாக பயிற்சி பாதிரியாக பணியாற்றி வந்தார். இவர் தங்கியிருந்த அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாதிரியார் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com