

ஸ்ரீவில்லிபுத்தூர்,
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்த சொக்கநாதன்புத்தூரை சேர்ந்தவர் அகஸ்தியர் (வயது 27). இவர் செங்கல் சூளை நடத்தி வருகிறார். இவர், கடந்த 19.11.2018 அன்று, 9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அகஸ்தியரை கைது செய்தனர். இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. நீதிபதி தனசேகரன் இந்த வழக்கில், அகஸ்தியருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் தமிழக அரசிடம் இருந்து நிவாரணத் தொகை பெற்றுத்தரவும் உத்தரவிட்டார்.