தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை

ஹாசனில் தனியார் நிறுவன ஊழியர் மனைவியின் தொல்லை தாங்க முடியாமல் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

ஹாசன்:

ஹாசனில் தனியார் நிறுவன ஊழியர் மனைவியின் தொல்லை தாங்க முடியாமல் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

குடித்ததால் தகராறு

ஹாசன் மாவட்டம் சங்கரிபுரம் பகுதியை சேர்ந்தவர் குருதத்தா என்ற குமார் (வயது 43). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி கல்பனா. இவரும் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு ஸ்ருதி என்ற மகள் உள்ளாள். அவள் தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தாள். குருதத்தா கடந்த சில வாரங்களாக சரியாக வேலைக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. தினமும் குடித்துவிட்டு வந்துள்ளார். இதனால் 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்தநிலையில் கடந்த 12-ந் தேதி கல்பனா மற்றும் கணவன் குருத்தாவிற்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் மிகவும் மனம் நொந்து போன குருதத்தா, வீட்டில் யாரும் இல்லாதபோது, மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்த மனைவி கல்பனா அதிர்ச்சி அடைந்து கதறி கூச்சலிட்டு அழுதார். இதுகுறித்து ஹாசன் நகர போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் குடும்ப தகராறில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. இருப்பினும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.

தற்கொலை கடிதம்

இந்தநிலையில் நேற்று முன்தினம் குருதத்தா எழுதிய கடிதம் ஒன்று போலீசாருக்கு கிடைத்தது. அந்த கடிதத்தில் எனது தற்கொலைக்கு மனைவி கல்பனாதான் காரணம். என்னை சரியாக மதிப்பது இல்லை. செலவுக்கு பணம் கொடுப்பது இல்லை. வீடு வாடகை பணம் வந்தால் உடனே அதை எடுத்து வைத்து கொள்வாள்.

குடும்ப பொறுப்புகளில் முக்கியத்துவம் கொடுக்காமல் அலட்சியமாக நடந்து வந்தார்.மேலும் தொல்லை கொடுத்து வந்தார். இதனால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று கூறிப்பிட்டுள்ளா.

இந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மனைவி கல்பனாவிடம் தொடர்ந்து விசாரணை நடததி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com