வாலாஜாவில் தனியார் பள்ளி உதவியாளர் தூக்குப்போட்டு தற்கொலை

வாலாஜாவில் தனியார் பள்ளி உதவியாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
வாலாஜாவில் தனியார் பள்ளி உதவியாளர் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

வாலாஜா

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில் உள்ள ஜங்கமசெட்டி தெருவை சேர்ந்தவர் சக்கரவர்த்தி (வயது 64). இவர் ராணிப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.

கடந்த சில மாதமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு, அதற்காக சிகிச்சை பெற்றும் பலன் அளிக்கவில்லை. இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத போது, மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து வாலாஜா போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com