பேரிடர் மீட்பு பணிகள் குறித்து செயல்முறை விளக்கம்

தென்காசி அருகே பேரிடர் மீட்பு பணிகள் குறித்து தீயணைப்பு துறையினர் செயல்முறை விளக்கம் நடந்தது.
பேரிடர் மீட்பு பணிகள் குறித்து செயல்முறை விளக்கம்
Published on

தென்காசி:

தென்காசி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் கவிதா உத்தரவின்படி தென்காசி அருகே உள்ள ஆயிரப்பேரியில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செயல்முறை விளக்கம் நடைபெற்றது. தென்காசி நிலைய அலுவலர் (பொறுப்பு) கணேசன் தலைமையில் சிறப்பு நிலை அலுவலர் செல்வன் மற்றும் வீரர்கள் செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தனர்.

வெள்ளத்தில் சிக்கியவர்களை வீட்டு உபயோக பொருட்களை வைத்து எவ்வாறு பாதுகாப்பாக மீட்பது? மற்றும் வெள்ள அபாயங்களில் முன்னெச்சரிக்கையாக செய்ய வேண்டியது, பேரிடர் மீட்பு பணிகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் ஆயிரப்பேரி மற்றும் பாட்டப்பத்து கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com