பேராசிரியர் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை

கடலூரில் பேராசிரியர் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பேராசிரியர் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை
Published on

கடலூர்,

கடலூர் கூத்தப்பாக்கத்தை சேர்ந்தவர் ஆதித்ய விஜய். இவருக்கும் சிதம்பரம் மன்னார்குடி தெருவை சேர்ந்த கணேசன் மகள் அபிராமி (வயது 31) என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகன் உள்ளான். ஆதித்ய விஜய் கடலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். அபிராமி கடந்த சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சம்பவத்தன்று அபிராமி தனக்கு உடல்நலம் சரியில்லை என்றும், அதனால் வேலைக்கு போக வேண்டாம் என தனது கணவரிடம் கூறியுள்ளார்.

தூக்கில் தொங்கினார்

இருப்பினும் ஆதித்ய விஜய் வேலைக்கு சென்று விட்டார். பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்த போது அபிராமி, தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். இதை பார்த்த ஆதித்ய விஜய், அவரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே அபிராமி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இதுகுறித்து அவரது தந்தை கணேசன் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com