வாலிபரை தாக்கிய 7 பேர் மீது வழக்குப்பதிவு
கொரடாச்சேரி:
கொரடாச்சேரி அருகே வாலிபரை தாக்கிய 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பெட்ரோல் போடுவதில் தகராறு
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி போலீஸ் சரகம் புரசாத்தான்குடியை சேர்ந்தவர் சக்தி (வயது 28). இவர், தனது உறவினர் அரவிந்தன் என்பவருடன் கொத்தவாசல் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட சென்றுள்ளார். அங்கு கொள்ளக்கண்டம் கிராமத்தை சேர்ந்த பிரமிட் மற்றும் அவரது நண்பர்கள் பெட்ரோல் போட வந்துள்ளனர். அப்போது பெட்ரோல் பங்கில் முதலில் யாருக்கு பெட்ரோல் போடுவது என இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது. பின்னர் இரு தரப்பினரும் பெட்ரோல் போட்டுவிட்டு ஊருக்கு சென்று கொண்டிருந்தனர்.
7 பேர் மீது வழக்குப்பதிவு
அப்போது கொள்ளக்கண்டம் கிராமம் அருகே வந்த சக்தியை, பிரமிட் மற்றும் அவரது நண்பர்கள் வழிமறித்து தாக்கி, அவருக்கு கொலைமிரட்டல் விடுத்தனர். இதில் காயமடைந்த சக்தி திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து சக்தி கொரடாச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சக்தியை தாக்கிய பிரமிட் மற்றும் அவரது நண்பர்கள் துளசிராமன், அஜித், சுஜன், தமிழ்வேலன் உள்ளிட்ட 7 பேர் மீது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

