பெண்ணை கற்பழித்த வாலிபர் மீது வழக்குப்பதிவு

கடனை அடைக்க உதவி செய்வதாக ஏமாற்றி பெண்ணை கற்பழித்த வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பெண்ணை கற்பழித்த வாலிபர் மீது வழக்குப்பதிவு
Published on

மும்பை, 

மும்பையை சேர்ந்த 26 வயது பெண்ணுக்கு சமூகவலைதளம் மூலம் 35 வயது வாலிபர் அறிமுகம் ஆனார். இதில் ஒருநாள் பெண் அவருக்கு அதிக கடன் இருப்பதை வாலிபரிடம் கூறினார். இதையடுத்து அந்தநபர் பெண்ணுக்கு கடனை அடைக்க உதவி செய்வதாக தெரிவித்தார். எனவே பெண் சம்பவத்தன்று வாலிபரை சந்திக்க செம்பூர் பகுதிக்கு சென்றார். அப்போது வாலிபர் அப்பெண்ணை கற்பழித்து உள்ளார்.

அதன்பிறகு வாலிபர் பெண்ணின் கடனை அடைக்க உதவி எதுவும் செய்யவில்லை. மேலும் அவரிடம் பேசுவதையும் நிறுத்தினார். இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் திலக்நகர் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் பண உதவி செய்வதாக ஏமாற்றி பெண்ணை கற்பழித்த வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்து அவரைதேடி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com