தேசிய கல்விக்கொள்கையை எதிர்த்து போராட்டம்

புதுவை யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூட்டத்தில் தேசிய கல்விக்கொள்கையை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தேசிய கல்விக்கொள்கையை எதிர்த்து போராட்டம்
Published on

புதுச்சேரி

புதுவை யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூட்டம் லாஸ்பேட்டை பொதிகை நகர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாநில அமைப்பாளர் சுவாமிநாதன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் தமிழரசன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில், மணிப்பூர், அரியானா மாநிலங்களில் கலவரங்களால் மக்கள் படும் இன்னல்களை கண்டுகொள்ளாமல் புதுவைக்கு வருகை வந்துள்ள ஜனாதிபதியை வன்மையாக கண்டிப்பது, தேசிய கல்விக்கொள்கை, முற்பட்ட சாதி இட ஒதுக்கீடு, சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் திணிப்பு உள்ளிட்ட சனாதன திட்டங்களையும், சட்டமன்றத்தில் மாநில அந்தஸ்து கேட்டு நிறைவேற்றிய தீர்மானத்தை 3 மாதங்களாக வைத்திருந்த மக்கள் விரோதி யார் என்ற முழக்கத்தை முன்வைத்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com