தொழிலாளிக்கு பீர் பாட்டில் குத்து

காட்டேரிக்குப்பம் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளிக்கு பீர் பாட்டில் குத்து விழுந்தது.
தொழிலாளிக்கு பீர் பாட்டில் குத்து
Published on

திருக்கனூர்

காட்டேரிக்குப்பம் அருகே குமராபாளையம் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் வைத்தீஸ்வரன் (வயது 46). கூலி தொழிலாளி. சம்பவத்தன்று குமராபாளையம் சாராயக்கடைக்கு சென்று குடித்தார். அப்போது அங்கு மது குடித்துக்கொண்டிருந்த பிள்ளையார்குப்பத்தை சேர்ந்த மஞ்சினி என்பவருக்கும், வைத்தீஸ்வரனுக்கும் குடிபோதையில் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மஞ்சினி, தான் மறைத்து வைத்திருந்த பீர் பாட்டிலால் வைத்தீஸ்வரனை தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் அவரது முகத்தில் ரத்தகாயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

இது குறித்த புகாரின்பேரில் காட்டேரிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிவு செய்து மஞ்சினியை வலைவீசி தேடி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com