நாமக்கல் ஆஞ்சநேயருக்கு புஷ்பங்கி அலங்காரம்

விரிச்சி, சம்பங்கி, சாமந்தி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வகையிலான பூக்கள் கொண்டு ஆஞ்சநேயருக்கு புஷ்பங்கி அலங்காரம் செய்யப்பட்டது.
நாமக்கல் ஆஞ்சநேயருக்கு புஷ்பங்கி அலங்காரம்
Published on

நாமக்கல் நகரின் மைய பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இந்த கோவிலில் தினமும் அபிஷேகம் மற்றும் பூஜை நடந்து வருகிறது.

அந்த வகையில் இன்று அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, சாமிக்கு 1008 வடைமாலை சாத்தப்பட்டது. பின்னர் பட்டாச்சாரியர்கள் குடம், குடமாக பால் ஊற்றி ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து எண்ணெய், பஞ்சாமிர்தம், மஞ்சள், சீயக்காய் உள்ளிட்ட நறுமண பொருட்களால் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் விரிச்சி, சம்பங்கி, சாமந்தி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வகையிலான பூக்கள் கெண்டு ஆஞ்சநேயருக்கு புஷ்பங்கி அலங்காரம் செய்யப்பட்டது.

இதில் நாமக்கல் மட்டும் இன்றி பிற மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com