ரகடா பட்டீஸ்

சுவையான ரகடா பட்டீஸ் ரெசிபியின் செய்முறை விளக்கத்தை இங்கே பார்க்கலாம்
ரகடா பட்டீஸ்
Published on

கடா பட்டீஸ்

டநாட்டு உணவான ரகடா பட்டீஸ் மும்பையில் பிரபலமானது. 'ரகடா' என்பது பட்டாணி கொண்டு தயாரிக்கப்படும் ஒருவகை கிரேவியாகும். பட்டீஸ் என்பது சிறு கட்லெட் போல இருக்கும்.

ரகடா தயாரிக்க தேவையான பொருட்கள்:

வெள்ளை பட்டாணி - 1 கப் (தண்ணீரில் ஊறவைத்தது)

தண்ணீர் - 1 கப்

மஞ்சள் தூள் - டீஸ்பூன்

பேக்கிங் சோடா - 1 சிட்டிகை

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பிரஷர் குக்கரில் பட்டாணி, மஞ்சள் தூள், பேக்கிங் சோடா, உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலந்து வேகவைக்கவும். பின்பு அதை கிரேவி பதத்துக்கு நன்றாக மசித்துக்கொள்ளவும்.

பட்டீஸ் தயாரிக்க தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு - 7

இஞ்சி விழுது - டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 1

கொத்தமல்லித்தழை - 1 கைப்பிடி

எண்ணெய் - 6 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

உருளைக்கிழங்குகளை வேகவைத்து தோலுரித்து மசிக்கவும். பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழையை பொடிதாக நறுக்கவும். உருளைக்கிழங்குடன் உப்பு, இஞ்சி விழுது, பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை சேர்த்து கலக்கவும். இந்தக் கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கட்லெட் போல தயார் செய்து வைக்கவும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் 4 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றவும். பின்பு தயார் செய்து வைத்திருக்கும் பட்டீஸ்களை தோசைக்கல்லில் சுற்றிலும் அடுக்கவும். மிதமான தீயில் அவற்றை இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

பரிமாறும் முறை:

தேவையான பொருட்கள்:

மிளகாய்த்தூள் - டீஸ்பூன்

சீரகத்தூள் - டீஸ்பூன்

பெரிய வெங்காயம் - (பொடிதாக நறுக்கியது)

கொத்தமல்லித்தழை - சிறிதளவு

சாட் மசாலா தூள் - டீஸ்பூன்

கொத்தமல்லி சட்னி - 1 டீஸ்பூன்

இனிப்பு சட்னி - 1 டீஸ்பூன்

ஓமப்பொடி (சேவ்) - 2 ஸ்பூன்

பிளாக் சால்ட் - தேவைக்கு

சற்று குழிவான தட்டில் 2 கரண்டி பட்டாணி கிரேவியை ஊற்றி, அதன் மேல் 2 பட்டீஸ்களை வைக்கவும். அதற்கு மேலே சட்னி வகைகளை பரவலாக ஊற்றவும். பின்பு மிளகாய்த்தூள், பிளாக் சால்ட், சீரகத்தூள் மற்றும் சாட் மசாலா தூள் ஆகியவற்றை தூவவும். அதன் மேல் வெங்காயம், கொத்தமல்லித்தழை, ஓமப்பொடியை தூவவும். இந்தக் கலவையை லேசாக கிளறி விடவும். இப்போது 'ரகடா பட்டீஸ்' தயார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com