

தமிழில் அருண்விஜய் நடித்த தடையற தாக்க என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ரகுல் பிரீத் சிங். அதன்பின், கார்த்தி ஜோடியாக தேவ், தீரன் அதிகாரம் ஒன்று, சூர்யாவின் என்ஜிகே உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது சிவகார்த்திகேயன் ஜோடியாக அயலான் படத்தில் நடித்துள்ளார். இதுதவிர பாலிவுட் மற்றும் டோலிவுட் திரையுலகிலும் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
இவர் அடிக்கடி தனது சமூக வலைத்தள பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவார். இந்நிலையில், தற்போது புதிய உடையில் எடுத்த புகைப்படத்தை ரகுல் பிரீத் சிங் பகிர்ந்துள்ளார். அவர் படுத்திருப்பதை போன்று எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.