ராமேசுவரத்தில் அதிக பட்சமாக 76 மில்லிமீட்டர் மழை

ராமேசுவரத்தில் அதிக பட்சமாக 76 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
ராமேசுவரத்தில் அதிக பட்சமாக 76 மில்லிமீட்டர் மழை
Published on

ராமநாதபுரம்,

ராமேசுவரத்தில் அதிக பட்சமாக 76 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

கனமழை

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வந்த நிலையில் நேற்று காலையும் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. இருப்பினும் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவதில் வழக்கம் போல தெளிவான அறிவிப்பு இல்லாததால் மாணவ- மாணவிகள் மட்டுமல்லாது பெற்றோர்களும் அவதி அடைந்தனர்.

இந்தநிலையில் காலை 8 மணி அளவில்தான் விடுமுறை என அறிவிக்கப்பட்டது. ஆனால், அதற்குள் மாணவ-மாணவிகள் பள்ளிகளுக்கு சென்றுவிட்டனர்.

இந்த விடுமுறை குழப்பத்தை களைய மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மழை அளவு

மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பதிவான மழை அளவு மில்லிமீட்டரில் வருமாறு:- ராமநாதபுரம்-17.6, மண்டபம்-11, பள்ளமோர்குளம்-5, ராமேசுவரம்-76.2 பாம்பன்-42.1, தங்கச்சிமடம்-30.5, திருவாடானை-8.4, தொண்டி-8.8, தீர்த்தாண்டதானம்-15, வட்டாணம்-8.4, ஆர்.எஸ்.மங்கலம்-5.5, பரமக்குடி-3.9, கமுதி-2.8, கடலாடி-3.2, வாலிநோக்கம்-3.8. சராசரி-15.14.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com