அடுத்த அதிரடிக்கு ரெடியான ரஜினி.. திரைப்பிரபலங்களை குவிக்கும் படக்குழு

ரஜினியின் புதிய படத்தை ஞானவேல் இயக்குகிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக 'தலைவர் 170' என படக்குழு தலைப்பு வைத்துள்ளது.
அடுத்த அதிரடிக்கு ரெடியான ரஜினி.. திரைப்பிரபலங்களை குவிக்கும் படக்குழு
Published on

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக 'தலைவர் 170' என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதைத்தொடர்ந்து இந்த படத்தில், ரித்திகா சிங், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக படக்குழு நேற்று அறிவித்திருந்தது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, 'தலைவர் 170' திரைப்படத்தில் 'பாகுபலி' நடிகர் ராணா டகுபதி இணைந்துள்ளதாக படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான 'ஜெயிலர்' திரைப்படம் பெரும் வெற்றியை பெற்றது. இதைத்தொடர்ந்து 'தலைவர் 170' திரைப்படத்திலும் திரைப்பிரபலங்கள் பலர் இணைந்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com