மாநாடு படக்குழுவுக்கு இன்ப அதிர்ச்சியளித்த ரஜினிகாந்த்

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் மாநாடு படக்குழுவுக்கு ரஜினிகாந்த் இன்ப அதிர்ச்சி கொடுத்து இருக்கிறார்.
மாநாடு படக்குழுவுக்கு இன்ப அதிர்ச்சியளித்த ரஜினிகாந்த்
Published on

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஏ சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ள மாநாடு திரைப்படம் பல போராட்டங்களுக்குப் பிறகு நவம்பர் 25ம் தேதி வெளியானது. படம் பார்த்த பலரும் சிம்புவுக்கு இது தரமான கம்பேக் என்று கொண்டாடி வருகின்றனர். அதேவேளையில், மாநாடு படம் அனைத்து தரப்பினரிடமும் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் மாநாடு படக்குழுவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இன்ப அதிர்ச்சி கொடுத்து இருக்கிறார். இதனை இயக்குனர் வெங்கட் பிரபு, தனது சமூக வலைத்தளத்தில், மாநாடு படம் பார்த்துவிட்டு தொலைபேசியில் தொடர்பு கொண்டு படக்குழுவுக்கு தலைவர் (ரஜினிகாந்த்) வாழ்த்து தெரிவித்தார் என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com