மகன் இயக்கத்தில் நடிக்கும் ராஜ்கிரண்

பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் ராஜ்கிரண், தனது மகனின் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
மகன் இயக்கத்தில் நடிக்கும் ராஜ்கிரண்
Published on

கஸ்தூரிராஜா இயக்குனராக அறிமுகமான முதல் படம் என் ராசாவின் மனசிலே. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று சூப்பர் ஹிட்டானது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் படத்தின் கதாநாயகனாக நடித்த நடிகர் ராஜ்கிரண். இப்படத்தில் இவர் தொடை தெரிய வேஷ்டி கட்டுவது, எலும்பு கடிப்பது பல காட்சிகளில் ரசிகர்களை கவர்ந்திருப்பார்.

தற்போது இந்த படத்தின் 2-ம் பாகத்தை ராஜ்கிரணின் மகன் திப்பு சுல்தான் நைனார் முஹம்மது இயக்க உள்ளார். இதன் மூலம் அவர் சினிமா துறையில் இயக்குனராக அறிமுகமாகிறார்.

இதற்கிடையில் நடிகர் ராஜ்கிரண், லைகா புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் சற்குணம் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பை முடித்து இருக்கிறார். மேலும், 2டி தயாரிப்பில் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் விருமன் படத்தில் கார்த்தியின் தாய்மாமாவாக முக்கிய கதாபாத்திரத்தில் மதுரையில் நடக்கும் படப்பிடிப்பில் தற்போது கலந்து கொண்டு நடித்து வருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com