எளிய முறையில் ரன்பீர் - ஆலியா திருமணம்.. குவியும் வாழ்த்துக்கள்

ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர், இருவரும் நேற்று மும்பையில் திருமணம் செய்துகொண்டனர், இதனை திரைபிரபலங்கள் வாழ்த்தி வருகின்றனர்.
எளிய முறையில் ரன்பீர் - ஆலியா திருமணம்.. குவியும் வாழ்த்துக்கள்
Published on

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான ரன்பீர் கபூர், ஆலியா பட் இருவரும் இன்று மும்பையில் திருமணம் செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் காதலித்து வருவதாக கூறப்பட்ட நிலையில், கடந்த 2019-ம் ஆண்டே இவர்களது திருமணம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. கொரோன காரணமாக தள்ளிப்போனது.

பாலிவுட்டின் நட்சத்திர ஜோடியின் திருமணம் பிரம்மாண்டமான முறையில், நடைபெறாமல், நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொள்ள எளிமையான முறையில் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த திருமணத்தில் கரீனா கபூர், கரிஸ்மா கபூர். கரண் ஜோகர், ஜோயா அக்தர், அர்ஜுன் கபூர் உள்ளிட்ட பிரபலங்களும், நெருங்கிய உறவினர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

இவர்களது திருமணத்திற்கு, நடிகர் அமிதாப் பச்சன் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் நட்சத்திர ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இருவரும் திருமணம் செய்துகொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com