இளம்பெண் பாலியல் பலாத்காரம்

புதுவையில் திருமண ஆசைவார்த்தை கூறி இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த செவிலிய அதிகாரி கைது செய்யப்பட்டார்.
இளம்பெண் பாலியல் பலாத்காரம்
Published on

புதுச்சேரி

புதுச்சேரி பாகூர்பேட் பகுதியை சேர்ந்தவர் வசந்த் (வயது 31). இவர் புதுவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் செவிலிய அதிகாரியாக பணியாற்றி வருகிறார். அங்கு முதலியார்பேட்டை பகுதியை சேர்ந்த 29 வயது இளம்பெண் ஒருவர் நர்சாக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் வசந்த், அந்த செவிலியரை திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே வசந்துக்கு, வேறொரு பெண்ணுடன் திருமண ஏற்பாடு நடந்ததாக தெரிகிறது. இதுபற்றி அறிந்த அந்த பெண் விஷம்குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதுகுறித்து வில்லியனூர் மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வசந்த் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

இதற்கிடையே வசந்த் உறவினர்கள் அவர் மீது பொய் வழக்குப்பதிவு செய்ததாகவும், அவரை விடுதலை செய்யக்கோரியும் மகளிர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com