மீண்டும் சுந்தர்.சி உடன் கூட்டணி அமைக்கும் ராஷி கண்ணா

தமிழ் திரையுலகில் பிசியான நடிகையாக வலம் வரும் ராஷி கண்ணா, மேதாவி, சைதான் கா பச்சா, சர்தார், திருச்சிற்றம்பலம் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.
மீண்டும் சுந்தர்.சி உடன் கூட்டணி அமைக்கும் ராஷி கண்ணா
Published on

நடிகை ராஷி கண்ணா, கடந்த 2013-ம் ஆண்டு வெளியான மெட்ராஸ் கபே எனும் இந்தி படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். பின்னர் தெலுங்கு படங்களில் நடித்து தென்னிந்திய அளவில் பிரபலமான இவர், கடந்த 2018-ம் ஆண்டு வெளியான இமைக்கா நொடிகள் படம் மூலம் தமிழ் திரையுலகில் எண்ட்ரி கொடுத்தார். பின்னர் அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன், அரண்மனை 3 போன்ற படங்களில் நடித்ததன் மூலம் முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

தற்போது மேதாவி, சைதான் கா பச்சா, சர்தார், திருச்சிற்றம்பலம் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ள நடிகை ராஷி கண்ணா, மேலும் ஒரு தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளாராம். சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் அவர் ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சுந்தர்.சி இயக்கிய அரண்மனை 3 படத்தில் ஹீரோயினாக நடித்த ராஷி கண்ணா தற்போது மீண்டும் அவருடன் கூட்டணி அமைக்க உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com