

நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வட மாநிலம் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து வாங்கி வரப்படுகின்றன. அந்த வகையில் நேற்று திருவாரூர் மாவட்டத்தில் இருந்து 2,600 டன் ரேஷன் அரிசி சரக்கு ரெயிலில் நாமக்கல்லுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த அரிசி மூட்டைகள் 150 லாரிகளில் ஏற்றி நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு மற்றும் பரமத்திவேலூர் பகுதிகளில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக குடோனுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இதேபோல் நேற்று ஆந்திர மாநிலத்தில் உள்ள இந்திய உணவு கழகத்தில் இருந்து மத்திய அரசு வழங்கிய 2,600 டன் ரேஷன் அரிசி நாமக்கல்லுக்கு சரக்கு ரெயிலில் கொண்டு வரப்பட்டது. இவை நாமக்கல்- திருச்செங்கோடு சாலையில் உள்ள தானிய கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டன.