கத்தியுடன் ரகளை; ரவுடி கைது

அரியாங்குப்பம் அருகே கத்தியுடன் ரகளையில் ஈடுபட்ட. ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
கத்தியுடன் ரகளை; ரவுடி கைது
Published on

அரியாங்குப்பம்

அரியாங்குப்பம் பழைய பாலம் அருகே சாலையோரத்தில் வாலிபர் ஒருவர் கத்தியுடன் ரகளையில் ஈடுபட்டார். அப்போது அங்கு ரோந்து சென்ற அரியாங்குப்பம் போலீசார் அவரை மடக்கி பிடித்தனர்.

விசாரணையில் அவர், அரியாங்குப்பம் பழைய பூரணாங்குப்பம் வீதியைச் சேர்ந்த அஜித் என்ற லோகநாதன் (வயது 23) என்பதும், ரவுடியாக அந்த பகுதியில் செயல்பட்டு வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து கத்தியும் பறிமுதல் செய்யப்பட்டது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com