ரியல்மி 11, 11 எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்

ரியல்மி 11, 11 எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்
Published on

ஸ்மார்ட்போன் தயாரிப்பில் சர்வதேச அளவில் பிரபலமாகத் திகழும் ரியல்மி நிறுவனம் புதிதாக 11 மற்றும் 11 எக்ஸ் 5-ஜி மாடல்கள் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. 6.72 அங்குல முழு ஹெச்.டி. பிளஸ் திரையைக் கொண்ட இதில் ஆக்டாகோர் மீடியா டெக் டைமென்சிடி பிராசஸர் உள்ளது. 8 ஜி.பி. ரேம் மற்றும் 128 ஜி.பி. நினைவகம் கொண்ட இதன் நினைவக திறனை மைக்ரோ எஸ்.டி. கார்டு மூலம் 2 டி.பி. வரை அதிகரிக்கலாம்.

ரியல்மி 11 மாடலில் பின்புறம் 108 மெகா பிக்ஸெல் கேமராவும், முன்புறம் 16 மெகா பிக்ஸெல் கேமராவும், ரியல்மி 11 எக்ஸ் மாடலில் பின்புறம் 64 மெகா பிக்ஸெல் கேமராவும், முன்புறம் 18 மெகா பிக்ஸெல் கேமராவும் உள்ளது. இதில் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு சிம் கார்டு போடும் வசதி, பக்கவாட்டுப் பகுதியில் விரல் ரேகை உணர் சென்சார் உள்ளது. 5 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி 67 வாட் சார்ஜருடன் வந்துள்ளது. கருப்பு, தங்க நிறம் போன்ற கண்கவர் வண்ணங்களில் கிடைக்கும்.

ரியல்மி 11 மாடல் விலை சுமார் ரூ.18,999 முதல் ஆரம்பமாகிறது. ரியல்மி 11 எக்ஸ் மாடல் விலை சுமார் ரூ.14,999 முதல் ஆரம்பமாகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com