ராமேசுவரம் மீனவர்கள் 8 பேர் விடுதலை

ராமேசுவரம் மீனவர்கள் 8 பேர் விடுதலை செய்யப்பட்டனர். படகின் உரிமையாளர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிடப் பட்டு உள்ளது.
ராமேசுவரம் மீனவர்கள் 8 பேர் விடுதலை
Published on

ராமேசுவரம்,

இலங்கை சிறையில் இருந்த ராமேசுவரம் மீனவர்கள் 8 பேர் விடுதலை சய்யப்பட்டனர். படகின் உரிமையாளர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டு உள்ளது.

கைது

ராமேசுவரத்தில் இருந்து கடந்த மாதம் 26-ந் தேதி ஒரு விசைப்படகில் 8 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இவர் களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற் படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத் தனர்.

இந்த நிலையில் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ராமேசுவரம் மீனவர்கள் 8 பேரும் நேற்று கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது 8 மீனவர் களையும் நீதிபதி விடுதலை செய்து உத்தரவிட்டதுடன் படகின் உரிமையாளர் நீதிமன்றத்தில் ஆஜராகி படகை விடுவிப்பது குறித்து வழக்கை நடத்தி கொள்ள வேண்டும் எனவும் ஆஜராக வில்லை என்றால் படகானது அரசுடைமையாக்கப்படும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

ஒப்படைப்பு

விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப் பட்டு உள்ளனர். இந்த மீனவர்கள் விரைவில் விமானம் மூலம் தமிழகம் அழைத்து வரப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com