திருத்தப்பட்ட வரைவு தரவரிசை பட்டியல் வெளியீடு

புதுச்சேரியில் மருத்துவ படிப்புகளுக்கான திருத்தப்பட்ட வரைவு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது..
திருத்தப்பட்ட வரைவு தரவரிசை பட்டியல் வெளியீடு
Published on

புதுச்சேரி

புதுச்சேரியில் இளநிலை மருத்துவம், பல் மருத்துவம், ஆயுர்வேதம், கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு கடந்த 9-ந் தேதி வரைவு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இந்தநிலையில் மாணவர்களிடம் இருந்து ஆட்சபேனை பெறப்பட்டு திருத்தப்பட்ட வரைவு தரவரிசை பட்டியல் சென்டாக் இணையதளத்தில் www.centacpuducherry.in வெளியிடப்பட்டுள்ளது. இதில் அரசு, நிர்வாகம், வெளிநாட்டு வாழ் இந்தியர், விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீடு உள்ளிட்ட விவரம் அடங்கியுள்ளது. இதில் ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்குள் தெரிவிக்க வேண்டும். இந்த தகவலை சென்டாக் கூடுதல் ஒருங்கிணைப்பாளர் அமன்சர்மா தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com