22 கிராம நிர்வாக அலுவலர்கள் இட மாற்றம்

22 கிராம நிர்வாக அலுவலர்கள் இட மாற்றம்

விருதுநகர் தாலுகாவில் 22 கிராம நிர்வாக அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ. கல்யாணகுமார் உத்தரவிட்டுள்ளார்.
Published on

விருதுநகர்,ஆக

விருதுநகர் தாலுகாவில் 22 கிராம நிர்வாக அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ. கல்யாணகுமார் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

கலந்தாய்வு

3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே கிராமத்தில் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர்களை பொது மாறுதலில் பணியிட மாற்றம் செய்யும் பொருட்டு விருதுநகர் தாலுகாவில் பணியாற்றி வரும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் கலந்தாய்வு நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் கீழ்க்கண்ட கிராம நிர்வாக அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி அழகாபுரியில் பணியாற்றும் வெண்ணிலா தாதம்பட்டிக்கும், வி.சுந்தரலிங்காபுரத்தில் பணியாற்றும் சர்மிளா புளியங்குளத்திற்கும், ஆவுடையாபுரத்தில் பணியாற்றும் சரவணன் மூளிப்பட்டிக்கும், வச்சக்காரப்பட்டியில் பணியாற்றும் முத்துராஜ் தம்மநாயக்கன்பட்டிக்கும், வடமலைக்குறிச்சியில் பணியாற்றும் கார்த்திகேயன் விருதுநகருக்கும், புளியங்குளத்தில் பணியாற்றும் செந்தில்குமார் கன்னிசேரிபுதூருக்கும், தம்மநாயக்கண்பட்டியில் பணியாற்றும் மலர்கொடி மீசலூருக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

விருதுநகர்

மீசலூரில் பணியாற்றும் சுப்புலட்சுமி கூரைக்குண்டுக்கும், கன்னிசேரிபுதூர் சுமித்திரா அழகாபுரிக்கும், ரோசல்பட்டி ரத்தினகுமார் வடமலைக்குறிச்சிக்கும், அல்லம்பட்டி சித்ரா புல்லலக்கோட்டைக்கும், சின்னமூப்பன்பட்டி பரமகுரு வச்சக்காரப்பட்டிக்கும், தாதம்பட்டி ராஜூ எல்லிங்க நாயக்கன்பட்டிக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

முத்துராமன்பட்டி ராஜபாண்டி கோட்டநத்தத்திற்கும், கூரைக்குண்டு ராமமூர்த்தி வி.சுந்தரலிங்காபுரத்திற்கும், கோட்டைப்பட்டி கருப்பசாமி கடம்பன்குளத்திற்கும், விருதுநகர் சீதாதேவி ஆவுடையாபுரத்திற்கும், கோட்டநத்தம் சமையன் சின்னமூப்பன்பட்டிக்கும், மூளிப்பட்டி விஜயகுமார் ரோசல்பட்டிக்கும், கடம்பன்குளம் பெத்துராஜ் முத்துராமன் பட்டிக்கும், செந்நெல்குடி மாரியப்பன் அல்லம்பட்டிக்கும், புல்லலக்கோட்டை பார்த்தசாரதி கோட்டைப்பட்டிக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ஏற்பதற்கில்லை

அவரவர் கேட்டுக்கொண்டு உள்ளபடியே மேற்கண்ட மாறுதல் செய்யப்பட்டுள்ளதால் கிராம நிர்வாக அலுவலர்கள் புதிய பணியிடத்தில் எவ்வித மறுப்பும் இன்றி உடன் பணியில் சேர வேண்டும். பணியிட மாற்ற உத்தரவு கிடைக்கப்பெற்ற பின் கொடுக்கப்படும் விடுப்பு அல்லது முறையீடு எதுவும் ஏற்பதற்கில்லை. பணிமாறுதலுக்கு உட்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் மாறுதல் செய்யப்பட்ட கிராமத்தில் பணியாற்றும் பொருட்டு உடனடியாக அவர்களை விடுவிக்கும்படி தாசில்தார் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். கலந்தாய்வு முறையில் பொது மாறுதல் செய்த பின்னர் தனித்தனியாக மாறுதல் வழங்குவது இல்லை. விருப்பத்தின் பேரில் செய்யப்பட்டுள்ளதால் பயணப்படி ஏதும் வழங்கப்படமாட்டாது.

இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com