பாசன வாய்க்காலில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

பாசன வாய்க்காலில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
பாசன வாய்க்காலில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
Published on

உப்பிலியபுரம்:

உப்பிலியபுரம் ஒன்றியம் பச்சபெருமாள்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட நெட்டவேலம்பட்டி பொங்கலாயி அம்மன் ஏரியின் பாசன வாய்க்காலில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது. இதில் மூன்றாம் மதகில் இருந்து செல்லும் பாசன வாய்க்காலில் 3,350 ச.மீ. ஆக்கிரமிப்புகள் பொக்லைன் எந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டது. இந்த பணியில் உப்பிலியபுரம் பொதுப்பணித்துறை உதவிப்பொறியாளர் காளம்பரி தலைமையில் எரகுடி வருவாய் ஆய்வாளர் நீலமேகம், பச்சபெருமாள்பட்டி கிராம நிர்வாக அலுவலர் இளவரசன், நில அளவையாளர் திவ்யபாரதி உள்ளிட்டோர் ஈடுபட்டனர். உப்பிலியபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பெரியமணி, செந்தில்குமார் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com