முதல்-அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த மு.க.ஸ்டாலின்: கவர்னர் ஏற்பு

மு.க.ஸ்டாலின் அளித்த ராஜினாமா கடிதத்தை கவர்னர் ஏற்றுக்கொண்டார்.
முதல்-அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த மு.க.ஸ்டாலின்: கவர்னர் ஏற்பு
Published on

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு நேற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் விஜய்யின் தவெக 108 இடங்களை கைப்பற்றி புதிதாக ஆட்சி அமைக்க உள்ளது. ஆளும் கட்சியான திமுக, பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. குறிப்பாக முதல்வர் ஸ்டாலின் உட்பட16 அமைச்சர்கள் இந்த தேர்தலில் தோல்வியடைந்துள்ளனர்.

இந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதல்-அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை கவர்னர் மாளிகைக்கு மு.க.ஸ்டாலின் அனுப்பியுள்ளார். கவர்னர் மாளிகையின் செயலாளர் மூலமாக் அந்த கடிதம் பெறப்பட்டு, கவர்னரிடம் கொடுக்கப்பட உள்ளது. மு.க.ஸ்டாலின் அளித்த ராஜினாமா கடிதத்தை கவர்னர் ஏற்றுக்கொண்டார்.

இந்த கடிதத்தை பெற்றுக்கொள்ளும் கவர்னர், தனிப்பெரும் கட்சியாக உள்ள தவெகவை ஆட்சி அமைக்கும்படி அழைப்பு விடுப்பார். இதையடுத்து தவெக ஆட்சி அமைக்கும். குறிப்பாக, பெரும்பான்மையை நிரூபிக்க தவெகவுக்கு இன்னும் 11 இடங்கள் தேவை எனும் நிலை உள்ளது. இதற்காக, விரைவில் சட்டசபையை கூட்டி தவெக தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். இதற்காக கம்யூனிஸ்டு கட்சிகள், மற்றும் பிற கட்சிகளுடன் தவெக பேச்சுவார்த்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com