ஓய்வுபெற்ற பேராசிரியர் மயங்கி விழுந்து சாவு

புதுச்சேரி கருவடிக்குப்பம் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
ஓய்வுபெற்ற பேராசிரியர் மயங்கி விழுந்து சாவு
Published on

லாஸ்பேட்டை

புதுச்சேரி கருவடிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ராஜமதி (வயது 64). ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியர். நேற்று இரவு வீட்டில் இருந்த ராஜமதி திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ராஜமதி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com