திருப்பதிக்கு மீண்டும் பி.ஆர்.டி.சி. பஸ்

புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழகம் (பி.ஆர்.டி.சி.) சார்பில் புதுச்சேரியில் இருந்து திருப்பதிக்கு மீண்டும் பஸ்கள் இயக்கப்படுகிறது.
திருப்பதிக்கு மீண்டும் பி.ஆர்.டி.சி. பஸ்
Published on

புதுச்சேரி

புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழகம் (பி.ஆர்.டி.சி.) சார்பில் புதுச்சேரியில் இருந்து திருப்பதிக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே மத்திய அரசின் உத்தரவின் படி, பி.ஆர்.டி.சி.க்கு சொந்தமான காலாவதியான 20-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்குவது நிறுத்தப்பட்டது. இந்தநிலையில் பழைய பஸ்கள் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, புதுச்சேரியில் இருந்து திருப்பதிக்கு புதுப்பிக்கப்பட்ட பி.ஆர்.டி.சி. பஸ் மீண்டும் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் இயக்கப்படுகிறது. இந்த பஸ் தினமும் காலை 9 மணிக்கு புறப்பட்டு திண்டிவனம், வந்தவாசி, காஞ்சீபுரம், திருத்தணி, புத்தூர் வழியாக சென்று மாலை 3.30 மணிக்கு திருப்பதியை சென்றடைகிறது. மீண்டும் திருப்பதியில் இருந்து இரவு 10 மணிக்கு புறப்பட்டு புதுச்சேரிக்கு மறுநாள் அதிகாலை 4 மணிக்கு வந்தடைகிறது. பயண கட்டணமாக ரூ.255 (முன்பதிவு கட்டணம் சேர்த்து) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com