மீண்டும் இணையும் சமந்தா - நாக சைதன்யா

சமந்தா -நாக சைதன்யா பிரிவிற்கு பிறகு மீண்டும் அவர்கள் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மீண்டும் இணையும் சமந்தா - நாக சைதன்யா
Published on

காதலித்து, திருமணம் செய்து கெண்ட சமந்தாவும், நாக சைதன்யாவும் திருமணமாகி 4 ஆண்டுகள் ஆன நிலையில் கடந்த ஆண்டு அக்டேபர் மாதம் இருவரும் விவாகரத்தை அறிவித்தனர்.

விவாகரத்திற்கு யார் காரணம் என பல வதந்திகள் பரவின. இவை அனைத்தையும் சட்ட ரீதியாக சந்தித்த சமந்தா, கணவரை பிரிந்த பிறகு பலவேறு படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். மேலும் கவர்ச்சியில் தாராளம் காட்டிவருகிறார்.

இந்நிலையில் சமந்தாவும், நாக சைதன்யாவும் மீண்டும் ஒன்று சேர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் அதில் டுவிஸ்ட் என்ன வென்றால் அவர்கள் ஒன்று சேர பேவது நிஜ வாழ்க்கையில் இல்லையாம். சினிமாவில் மட்டும் தானாம். பிரபல பெண் டைரக்டரான நந்தினி ரெட்டி, தான் இயக்க பேகும் புதிய படத்தில் நாக சைதன்யா- சமந்தா ஜேடியை ஒன்று சேர்க்க முயற்சி செய்து வருகிறாராம்.

2019 ம் ஆண்டு ஓ பேபி படத்தில் நடித்துக் கெண்டிருக்கும் பேதே இவர்களிடம் மற்றெரு படத்தில் சேர்ந்து நடிக்க கதை கூறி உள்ளார். 2013 ம் ஆண்டு ஜபர்தஸ்த் படத்தில் நடிக்கும் பேதிருந்தே சமந்தாவும், நந்தினி ரெட்டியும் ரெம்பவும் க்ளேசாம். இதனால் தான் இந்த ஜேடியை மீண்டும் திரையில் ஒன்று சேர்க்க வேண்டும் என முடிவு செய்துள்ளாராம். இந்த படம் பற்றியும் நாக சைதன்யா, சமந்தா மீண்டும் ஒன்று சேர்ந்து நடிப்பது பற்றியும் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளதாம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com