வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டம்: பொதுமக்கள் கடும் அவதி

மணல் திருட்டை தடுக்க முயன்ற வருவாய் துறை அலுவலர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது
வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டம்: பொதுமக்கள் கடும் அவதி
Published on

ராஜபாளையம்,

மணல் திருட்டை தடுக்க முயன்ற வருவாய் துறை அலுவலர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக் கோரி வருவாய்த்துறை அலுவலர்கள் மாவட்டம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகிறார்கள் ராஜபாளையம் தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் சரவணன் தலைமையில் 35அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் தொடர் வேலை புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வேலையை விட்டு விட்டு பெயர் மாற்றம், வாரிசு சான்றிதழ், பட்டா மாறுதல், புதிய குடும்ப உறுப்பினர் அட்டை, பல்வேறு பணிகளுக்காக தொலை தூர கிராமங்களில் இருந்து வருவோர் அலுவலக பணி முடியாமல் மிகுந்த வேதனையுடன் திரும்பிச்செல்கின்றனர். இந்த நிலையில் சமத்துவ மக்கள் கட்சி மாவட்ட தொண்டரனி செயலாளர் மாரிமுத்து விடுத்துள்ள அறிக்கையில் கலெக்டர் இந்த பிரச்சினையில் தலையிட்டு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com