சாலையை சீரமைக்க கோரிக்கை

காயாபட்டி அருகே சேதமடைந்த சாலைய சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாலையை சீரமைக்க கோரிக்கை
Published on

காரியாபட்டி,

காரியாபட்டியலிருந்து அ.முக்குளம் செல்லும் சாலையிலிருந்து ஏ.தொட்டியங்குளம் கிராமத்திற்கு செல்லும் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இந்த கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து வாகனங்கள் செல்லமுடியாத அளவிற்கு மோசமாக உள்ளது. இந்த சாலைவழியாக இலுப்பைகுளம், டி.வேப்பங்குளம், என்.நெடுங்குளம் உள்பட பல்வேறு கிராமத்தை சேர்ந்த மக்கள் ஏ.முக்குளம் சென்று வருகின்றனர். பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களும் இந்த சாலை வழியாக மிகவும் சிரமத்துடன் சென்று வருகின்றனர். பொதுமக்கள் நலனில் அக்கறை கொண்டு ஏ.தொட்டியங்குளம் கிராமத்திற்கு செல்லும் சாலையை விரைவில் சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com