சாலை விபத்தில் இளம்பெண் பலி; 2 பேர் காயம்

அரசு பஸ்சை முந்தி சென்றபோது சாலை விபத்தில் இளம்பெண் பரிதாபமாக இறந்தார். மேலும், 2 பேர் காயம் அடைந்தனர்.
சாலை விபத்தில் இளம்பெண் பலி; 2 பேர் காயம்
Published on

கரூர்,

இளம்பெண் பலி

வெள்ளியணை அருகே உள்ள பொரணியை சேர்ந்தவர் அருண் (வயது 19). இவர் தனது அக்காள் ப்ரீத்தா(26)வுடன் மோட்டார் சைக்கிளில் கரூர்-திருச்சி சாலையில் சென்று கொண்டு இருந்தார். அப்போது முன்னால் சென்ற தனியார் பஸ்சை அருண் முந்த முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக பஸ் மீது மோதி அந்த வழியாக சென்ற மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட ப்ரீத்தா தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அருண் லேசான காயம் அடைந்தார்.

மருத்துவமனையில் சிகிச்சை

மேலும் இந்த விபத்தில் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த கோவக்குளத்தை சேர்ந்த செல்வராணி (38) என்பவரும் காயம் அடைந்தார். இதையடுத்து, அருண் கரூர் தனியார் மருத்துவமனையிலும், செல்வராணி காந்தி கிராமத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த விபத்து குறித்து பசுபதிபாளையம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com