சாலை மறியல்; 18 பேர் மீது வழக்கு

செல்லூர் கிராமத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட 18 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
சாலை மறியல்; 18 பேர் மீது வழக்கு
Published on

திருநள்ளாறு

திருநள்ளாறை அடுத்த செல்லூர் கிராமத்தில் பல ஆண்டுகளாக சேதமடைந்து கிடக்கும் சாலையை சீரமைக்க வலியுறுத்தி காரைக்கால்-கும்பகோணம் சாலையில் கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதை தொடர்ந்து போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிட செய்தனர். இந்தநிலையில் போக்குவரத்து மற்றும் பாதசாரிகளுக்கு இடையூறாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக செல்லூர் தமிழ்மணி (வயது20), சுபாஷ்(20), பாலசந்தர்(53), ஜான்மதியழகன்(28), யோகேஷ்(21), நிரஞ்சன்(19), மணிகண்டன்(20), வீ.மணிகண்டன்(20) சந்துரு(20), மனோகர்20), ஐஸ்வரியா(40), சசி(41), ஜோதி(43), மர்லீஸ்(41), சுதா(41), வனிதா(41) உள்ளிட்ட 12 ஆண்கள், 6 பெண்கள் என மொத்தம் 18 பேர் மீது நிரவி போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com