காதலர் தினத்தை முன்னிட்டு ஓசூர் பகுதியில் ரோஜா பூ அறுவடை பணி தீவிரம்

வருகிற 14-ந்தேதி காதலர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
காதலர் தினத்தை முன்னிட்டு   ஓசூர் பகுதியில் ரோஜா பூ அறுவடை பணி தீவிரம்
Published on

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் விவசாயிகள் மலர் சாகுபடியில் அதிக அளவில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். குறிப்பாக ரோஜா சாகுபடி ஓசூர் பகுதியில் மிகவும் பிரபலம் ஆகும். ஓசூர் பாகலூர், பேரிகை மற்றும் சுற்றுவட்டாரங்களில் சுமார் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பசுமைக்குடில்களை அமைத்து விவசாயிகள் ரோஜா சாகுபடி செய்து வருகின்றனர்.

கிறிஸ்துமஸ், புத்தாண்டு. காதலர் தினம் ஆகிய நாட்களில் ஓசூர் பகுதியில் உற்பத்தியாகும் லட்சக்கணக்கான ரோஜா பூக்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தும், நாட்டின் பல நகரங் களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதன் மூலம் ஆண்டுதோறும் மலர் சாகுபடி விவசாயிகள் நல்ல வருவாயை ஈட்டி வருகின்றனர்.

இந்தநிலையில் வருகிற 14-ந்தேதி (சனிக்கிழமை) காதலர் தினம் உலகம் முழுவதும் கொண் டாடப்படுகிறது. இதற்காக ஓசூர் பகுதியில் நேற்று முதல் ரோஜா மலர்களை அறுவடை செய் யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. குறிப்பாக சிவப்பு ரோஜாக்கள் எனப்படும் தாஜ்ம கால் வகை ரோஜாக்களுக்கு சந்தைகளில் நல்ல வரவேற்பு உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு சிவப்பு ரோஜா பூவின் விலை ரூ.7-க்கு விற்பனையான நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு அதன் விலை கிடுகிடுவென உயர்ந்து தற்போது ரூ.20 வரை அதிகரித்துள்ளது. 20 பூக்கள் கொண்ட ஒரு கட்டு சிவப்பு ரோஜா ரூ.400-க்கு விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com