ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் ரூ.24 ஆயிரம் மோசடி - போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார்

கிரெடிட் கார்டை பயன்படுத்தி ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் ரூ.24 ஆயிரம் மோசடி நடைபெற்றது குறித்து போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் ரூ.24 ஆயிரம் மோசடி - போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார்
Published on

வேலூர்,

மேல்பாடி அருகேயுள்ள கொக்கேரி கிராமத்தை சேர்ந்தவர் குருநாதன் (வயது 67), ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் இருந்து கிரெடிட் கார்டு பெற்றுள்ளார். அதனை பயன்படுத்தி பல்வேறு பொருட்கள் வாங்கி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக குருநாதனின் செல்போனுக்கு குறுந்தகவல் ஒன்று வந்தது.

அதில், அவரது கிரெடிட் கார்டை பயன்படுத்தி ரூ.24 ஆயிரத்துக்கு பொருட்கள் வாங்கியிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து குருநாதன் சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்று விசாரித்தார். அப்போது மர்மநபர்கள் குருநாதனின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி ரூ.24 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் வாங்கி மோசடி செய்தது தெரிய வந்தது.

இது குறித்து குருநாதன் நேற்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com