நுகர்வோர்களுக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு

நுகர்வோர்களுக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கி மக்கள் கோர்ட்டில் சமரச தீர்வு காணப்பட்டது.
நுகர்வோர்களுக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு
Published on

புதுச்சேரி

நுகர்வோர்களுக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்க மக்கள் கோர்ட்டில் சமரச தீர்வு காணப்பட்டது.

மக்கள் கோர்ட்டு

நுகர்வோர் ஆணையத்தில் தேங்கும் வழக்குகளுக்கு சமரச தீர்வு காணும் அடிப்படையில் மாதந்தோறும் 3-வது சனிக்கிழமைகளில் மக்கள் கோர்ட்டு (லோக் அதாலத்) நடத்தப்படுகிறது. அதன்படி புதுவை மாவட்ட நுகர்வோர் ஆணையத்தில் மக்கள் கோர்ட்டு இன்று நடந்தது.

இதற்காக மாவட்ட நுகர்வோர் ஆணைய தலைவர் முத்துவேல் தலைமையில் உறுப்பினர்கள் ஆறுமுகம், கவிதா ஆகியோரை கொண்ட அமர்வு அமைக்கப்பட்டிருந்தது. இந்த அமர்வு முன்பு நிலுவையில் உள்ள 25 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில் 8 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

ரூ.20 லட்சம்

அதன்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு, ரூ.20 லட்சத்து 39 ஆயிரத்து 846 நிவாரணம் வழங்கி தீர்வு காணப்பட்டது. இந்த மக்கள் நீதிமன்றத்தில் மூத்த வக்கீல்கள் மோகன்தாஸ், கோவிந்தசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை நுகர்வோர் குறைதீர்வு ஆணைய பதிவாளர் குணசேகர் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com