பொது இடத்தில் ரகளை; 7 பேர் கைது

புதுவையில் பொது இடத்தில் ரகளை செய்த 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
பொது இடத்தில் ரகளை; 7 பேர் கைது
Published on

புதுச்சேரி

புதுச்சேரி 100 அடி சாலையில் உள்ள தனியார் மதுபானக்கடை அருகே 2 பேர் ரகளையில் ஈடுபடுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் உருளையன்பேட்டை போலீசார் அங்கு விரைந்து சென்று ரகளையில் ஈடுபட்ட கோபாலன்கடையை சேர்ந்த அலெக்ஸ் (வயது 43), சாரம் பாலாஜி நகரை சேர்ந்த விஜி (44) ஆகியோரை கைது செய்தனர். இதேபோல் பல்வேறு இடங்களில் ரகளையில் ஈடுபட்டதாக தவளக்குப்பம் டி.என்.பாளையம் பகுதியை சேர்ந்த நித்திஷ் (19), வேல்ராம்பேட்டை சேர்ந்த ஸ்ரீநாத் (25), கடலூர் சோலை நகரை சேர்ந்த ராஜா (40), சுத்திக்குப்பத்தை சேர்ந்த ஆகாஷ் (22) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் வீராம்பட்டினம் மாரியம்மன் கோவில் அருகே அந்த வழியாக செல்லும் பெண்களை பாட்டுப்பாடி கிண்டல் செய்த அதே பகுதியை சேர்ந்த கமலசேகரன் (34) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com