ஸ்டார்ட்-அப் முதலீடுகளை ஈர்க்கும் விதிகள்!

உங்களுக்கு சொந்த தொழில் தொடங்கும் ஆசை இருக்கிறதா..? முதலீட்டிற்கு என்ன செய்யலாம்?, முதலீட்டாளர்களை எப்படி ஈர்க்கலாம்?... போன்ற சிந்தனையில் இருப்பவர்களுக்காகவே, இந்த பதிவு.
ஸ்டார்ட்-அப் முதலீடுகளை ஈர்க்கும் விதிகள்!
Published on

 ஸ்டார்ட்-அப் தொழில் முயற்சியில், எப்படியெல்லாம் முதலீடுகளை ஈர்க்கலாம், எப்படி செயல்படலாம் என்பதை சுருக்கமாக கொடுத்திருக்கிறோம். படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

1. ஸ்டார்ட் அப் தொடங்க முடிவு செய்தால் ஆழமான மார்க்கெட் ஆய்வுக்குப் பிறகு களத்தில் இறங்குங்கள்.

2. மக்களின் தினசரி பிரச்சினைகளை தீர்க்க உதவாத ஸ்டார்ட் அப் ஐடியா பிக்-அப் ஆகாது.

3. ஐடியா, ஸ்டார்ட் அப்பில் இருக்கும் அதே நிலையில் இருக்கவேண்டிய அவசியமில்லை. நமக்கு பரிணாம வளர்ச்சி உள்ளது போலவே, ஐடியாவையும் தொடர்ச்சியாக மேம்படுத்துங்கள்.

4. ஸ்டார்ட் அப் ஐடியாவை பிடித்திருக்கிறது என்று கூறி உற்சாகப் படுத்துபவர்கள் அதனை பயன்படுத்த எந்த கேரண்டியும் இல்லை. அதனால் சிறுசிறு ஏமாற்றங்களை தாங்கி கொள்ள தயாராக இருங்கள்.

5. செலவழிப்பது முதலீட்டாளர்களின் பணம் என்பதால் கவனமாக செலவழியுங்கள். உங்கள் வளர்ச்சி வேறு, ஸ்டார்ட் அப் நிறுவன வளர்ச்சி வேறு என்பதை புரிந்துகொள்வது நல்லது.

6. ஸ்டார்ட் அப் தொழிலின் ஆரம்ப நிலையில் தேவையில்லாத ஆர்ப்பாட்ட விளம்பர முயற்சிகள், நிதி முதலீடுகளில் கவனமாக இருங்கள். முழு கவனமும் தொழில் முயற்சியில் இருந்தால் மட்டுமே ஸ்டார்ட் அப்பை வெற்றி பெற செய்ய முடியும்.

7. உங்கள் தொழில் மீது ஆர்வமுள்ளவர்களை துணை நிறுவனர்களாக சேர்ப்பது நல்லது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com