ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறப்பு

ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு சாமி தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறப்பு
Published on

சபரிமலை,

கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோயில் நடை மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்கள் தவிர, மாதாந்திர வழிபாட்டுக்காக ஒவ்வொரு மாதமும் திறக்கப்படுவது வழக்கம். இது தவிர ஓணம், விஷு, பிரதிஷ்டை உள்ளிட்ட சிறப்பு தினங்களிலும் நடை திறக்கப்படும்.

மேலும் மாத துவக்கத்தில் ஐந்து நாட்கள் பூஜை நடைபெறும். அந்த வகையில் ஆனி மாத பூஜைக்காக நாளை மாலை நடை திறக்கப்படுகிறது. முன்னதாக தந்திரி கண்டரரு ராஜீவரரு, பிரம்மதத்தன் முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை காண்பிக்கிறார்.

அதன்பின் கற்பூர ஆழியில் தீ மூட்டப்படுகிறது. நாளைய தினம் சிறப்பு பூஜைகள் நடைபெறாத நிலையில், நாளை மறுதினம் காலை முதல் 19ம் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து அன்று இரவு ஹரிவராசனம் பாடி நடை சாத்தப்படுகிறது. ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு சாமி தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படுகிறது. 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com