சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று திறப்பு

பிரதிஷ்டை தின சிறப்பு பூஜை நாளை அதிகாலை தொடங்குகிறது
சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று திறப்பு
Published on

திருவனந்தபுரம்,

சபரிமலை அய்யப்பன் கோவில் நடை மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்கள் தவிர மாதாந்திர வழிபாட்டுக்காக ஒவ்வொரு மாதமும் திறக்கப்படுவது வழக்கம். இது தவிர சிறப்பு நாட்களிலும் நடை திறக்கப்படும். அதன்படி ஆண்டுதோறும் பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும்.

இந்த ஆண்டுக்கான பிரதிஷ்டை தினம் நாளை (வியாழக்கிழமை) ஆகும். இதற்காக சபரிமலை கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரர் ராஜீவரர் முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடை திறப்பார்

நாளை அதிகாலை பிரதிஷ்டை தின சிறப்பு பூஜை தொடங்குகிறது. பக்தர்கள் வழக்கம்போல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து நடைபெறும் வழிபாடுகளுக்கு பிறகு நாளை இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்படும். அதை தொடர்ந்து ஆனி மாத பூஜைக்காக வருகிற 14-ந் தேதி நடை திறக்கப்படும். பின்னர் 15-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை 5 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com