சாதனை படைத்த ஓவிய கலைஞரை பாராட்டிய சச்சின்

அரசமர இலையில் சச்சின் தெண்டுல்கரில் உருவத்தை வரைந்த ஓவிய கலைஞரை சச்சின் பாராட்டி கடிதம் எழுதியுள்ளார்.
சாதனை படைத்த ஓவிய கலைஞரை பாராட்டிய சச்சின்
Published on

உடுப்பி:

அரசமர இலையில் சச்சின் தெண்டுல்கரில் உருவத்தை வரைந்த ஓவிய கலைஞரை சச்சின் பாராட்டி கடிதம் எழுதியுள்ளார்.

உடுப்பி மாவட்டம் மணிப்புரா கிராமத்தை சேர்ந்தவர் மகேஷ் மர்னே. ஓவியரான இவர் சமீபத்தில் அரசமர இலையில் இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரின் உருவத்தை வடிவமைத்திருந்தார். அதாவது இலையின் மற்ற பாகங்களை வெட்டி, அழகாக சச்சினின் உருவத்தை வடித்திருந்தார். 7 நிமிடத்தில் இந்த சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.

இது உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இதை அறிந்த சச்சின் தெண்டுல்கர், மகேஷ் மர்னேவை பாராட்டி கடிதம் அனுப்பியுள்ளார். அதில், 'நீங்கள் எனது உருவத்தை அழகாக வடிவமைத்துள்ளீர்கள். எனது மீதான அளவுக்கு அதிகமான அன்பால் இது சாத்தியமாகியுள்ளது. அதற்காக தங்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்' என்று சச்சின் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com