

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக ஜொலித்து வருபவர், சமந்தா. இவர் நடித்த காத்து வாக்குல ரெண்டு காதல்' படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது.
சமந்தா தற்போது விஜய் தேவரகொண்டா ஜோடியாக, ஒரு தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து வருகிறது. அதே வேளை சமந்தாவின் பிறந்தநாளும் வந்துள்ளது.
இதையடுத்து விஜய் தேவரகொண்டா மற்றும் படக்குழுவினர் சமந்தாவுக்கு வித்தியாசமான முறையில் பிறந்தநாள் வாழ்த்து கூற விரும்பினர். நள்ளிரவில் குளிரில் ஒரு காட்சியை படமாக்க உள்ளதாக சமந்தாவிடம் கூறியுள்ளனர். சமந்தாவும் அந்தக் காட்சியில் நடித்துள்ளார்.
அப்போது விஜய் தேவரகொண்டா நடித்துக்கொண்டே அவரிடம் பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறினார். அதைத்தொடர்ந்து படக்குழுவினரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி உற்சாகக் குரல் எழுப்பினர். இது சமந்தாவுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து சமந்தா பிறந்த நாள் கேக்' வெட்டி மகிழ்ந்தார்.
இது தொடர்பான வீடியோ காட்சியையும் சமந்தா தனது வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ரசிகர்களும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.